தமிழர் பகுதியில் ஆசிரியரொருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், விசுவமடு பகுதியில் உள்ள விசுவமடு மகாவித்தியாலத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்
குறித்த அச்சுறுத்தலானது மாணவர்கள் ஊடாகவே தொலைபேசியில் விடுக்கப்பட்டுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 08.07.2024 அன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |