சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்
கல்முனை(Kalmunai) கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களிடையே ஜனநாயக மரபுகளை மதித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூக விஞ்ஞான பாடத்தின் இணைப்பாடவிதான செயற்பாடான மாணவர் நாடாளுமன்றத்தை உருவாக்கும் பொருட்டு இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் நாடாளுமன்றம்
பாடசாலையின் அதிபர் எம்.சி.நஸ்லின் றிப்காவின் ஆலோசனை வழிகாட்டலில் மாணவர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அமீர் ஹுசைன் தலைமையில் மிக நேர்த்தியாக நடைபெற்றுள்ளது.
இந்த செயற்பாட்டினை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் திட்டமிட்டு நடாத்தியுள்ளனர்.
இந்த தேர்தல் நடவடிக்கையினை வலய நாடாளுமன்ற இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மௌசூர், சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்களான முஹம்மட் தையூப், ஜுலூல் மற்றும் ஆங்கில பாடத்துக்கான வலய இணைப்பாளர் எம்.ஆரிப் ஆகிடீயோர் கண்காணிப்பு செய்துள்ளனர்.
மேலும், இந்த தேர்தல் நடிவடிக்கை செயற்பாடுகளுக்கு பிரதி அதிபர். ஐ.எம்.எஃப்.மர்சுனா, உதவி அதிபர் அப்துல் கபூர் அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



