ஈரானுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு இராச்சியம் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் அதன் வான்வெளி, நிலம் அல்லது கடல்களைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று ஐக்கிய அரபு இராச்சியம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளதுடன் அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கவலை உலக நாடுகளின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
தாக்குதல்
இந்த நிலையிலே ஐக்கிய அரபு இராச்சியம் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் தளவாட ஆதரவை (Logistical support) வழங்கப் போவதில்லை என்பதில் ஐக்கிய அரபு இராச்சியம் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண சிறந்த வழி பேச்சுவார்த்தை, பதற்றத்தைத் தணித்தல், சர்வதேச சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதித்தல் ஆகியவையே என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.