ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டம்
2024 மற்றும் 2025ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 2023 மற்றும் 2024ஆம் நிதியாண்டில் 7,925 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
அதன்படி, 2023 மற்றும் 2024ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024 மற்றும் 2025 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி இலாபம்
அத்துடன் அந்நியச் செலாவணி இலாபம் குறைந்ததே இதற்கு காரணம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் 26,717 மில்லியன் ரூபாவாக இருந்த அந்நியச் செலாவணி இலாபம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் 3,925 மில்லியன் ரூபாவாக குறைவடைந்தது.
டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது அந்நியச் செலாவணி இலாபம் குறைவடைகிறது. இதனால் இலாபம் நஷ்டமாக மாறுகிறது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |