விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

SriLankan Airlines Bandaranaike International Airport Sri Lanka Airport
By Faarika Faizal Oct 17, 2025 04:04 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இலங்கையின் முன்னணிப் பாடகரான சாமர ரணவக்க என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டுபாய்க்கு பயணிக்கவிருந்த சிறீலங்கன் விமானத்தில் இருந்தே இவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாமர ரணவக்க அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் ஏறும்போது விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஷாரா கைது தொடர்பாக நாமல் அச்சமடையத் தேவையில்லை!

இஷாரா கைது தொடர்பாக நாமல் அச்சமடையத் தேவையில்லை!

கடுமையான வாக்குவாதம் 

இதனால் அவர் விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர் | Srilankan Airlines

அத்துடன், மது அருந்தி மோசமாக நடந்து கொண்ட பாடகரை விமானத்தில் பறக்க அனுமதிக்க முடியாது என்று விமானத்தின் தலைமை விமானி முடிவு செய்தத்துடன், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் விசாரணை 

இதனையடுத்து விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபல பாடகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தீவிர விசாரனையை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை : இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

சரத் பொன்சேகாவின் பதவி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சரத் பொன்சேகாவின் பதவி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW