பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய தகவல்

Sri Lanka
By Thahir Aug 30, 2023 10:46 PM GMT

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய தகவல் | Srilanka Birth Certificate

அட்டை பெறாதவர்கள்

40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள், வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய தகவல் | Srilanka Birth Certificate