பிரான்ஸில் சாதனை படைத்த 18 வயது இலங்கை வம்சாவளி மாணவன்!
பிரான்ஸின் கயன்கோர்ட் நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவரான பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவாகி இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் கல்வி பயின்று வருகின்றார்.
கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது முதலாவது வாக்கைப் பதிவு செய்ததுடன், வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் பிலால் லுக்மான் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.