மக்களுக்காக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் வழங்கிய நன்கொடை!

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Fathima Dec 02, 2025 09:50 AM GMT
Fathima

Fathima

இயற்கை பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

காசோலையை கையளிப்பு

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலையை கையளித்துள்ளார்.

மக்களுக்காக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் வழங்கிய நன்கொடை! | Sri Lankan Dawoodi Bora Community Donation

இந்த நிகழ்வு இன்று(02.12.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்ததுடன் அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.