இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாயில் வீழ்ச்சி!
Sri Lanka
Tourism
Economy of Sri Lanka
Tourist Visa
By Laksi
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாயானது வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வருவாயில் வீழ்ச்சி
எனினும் கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |