பாலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவு: மீளுறுதிப்படுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பாலஸ்தீனத்தின் இறையாண்மைக்கான இலங்கையின் ஆதரவினை மீளுறுதிப்படுத்துவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைரை இஸ்லாமாபாத்தில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவு
இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இச்சந்திப்பின் போது இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியதாகவும், பாலஸ்தீனத்தின் இறையாண்மைக்கான இலங்கையின் ஆதரவினை மீளுறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'கலாநிதி சுஹைர் இலங்கைக்கான தூதுவராகப் பதவி வகித்த காலப்பகுதியில் சகல நாடுகளினதும் இறையாண்மையை வலுப்படுத்துவதற்கான தனது வலுவான கடைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
அதேபோன்று சுதந்திரமானதும், இறையாண்மையுடையதுமான பாலஸ்தீனத்துக்கான எனது கடைப்பாட்டை நானும் மீளுறுதிப்படுத்தினேன்' என்றும் அமைச்சர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |