வரலாற்றில் இடம்பிடித்துள்ள 2024 ஜனாதிபதி தேர்தல்

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Benat Sep 21, 2024 02:51 PM GMT
Benat

Benat

நடந்து முடிந்துள்ள இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். 

வன்முறை ஏதும் இல்லை..

மேலும், குறித்த காலப்பகுதியில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் இடம்பிடித்துள்ள 2024 ஜனாதிபதி தேர்தல் | Sri Lanka Presidential Election Namal Rajapaksa

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த ஆண்டு 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் பல மாவட்டங்களில் 75%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

1,713 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.