ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கு பதவி வழங்கும் நிகழ்வு

By Farook Sihan Jan 16, 2026 01:28 PM GMT
Farook Sihan

Farook Sihan

''தளிர்விடும் மரங்கள்" என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கு பதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு, வியாழக்கிழமை(15) இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் முஸ்னி இல்லத்தில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

பதவி வழங்கும் நிகழ்வு

இதன்போது, கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், இளைஞர்களை ஆபத்தான போதைப் பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கு பதவி வழங்கும் நிகழ்வு | Sri Lanka Muslim Congress Youth Organizers

இந்த நிகழ்வில், கட்சியின் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் றஹ்மத் மன்சூர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபீன் , கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், மற்றும் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் கட்சிப் போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery