சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்!

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Farook Sihan Jan 16, 2026 10:15 AM GMT
Farook Sihan

Farook Sihan

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இடம்பெற்றது.

கல்முனை தொகுதி நற்பிட்டிமுனையில் நேற்று(15) இரவு நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

உரை

நிகழ்வின் ஆரம்பத்தில் கிராஅத் மௌலவி எச்.எம்.தானீஸ் மேற்கொண்டதுடன் கட்சிக்கீதம் ஒலிக்கப்பட்டது. பின்னர் வரவேற்பு உரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவுத் தலைவர் எம்.எம். றியாஸ் மேற்கொண்டார்.

சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்! | Sri Lanka Muslim Congress Narpittimunai Meeting

தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றதுடன் நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரிவிற்கான இளைஞர் அமைப்பாளர்கள் அறிமுகமும் நியமனம் வழங்கலும் நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். உபைத்துல்லாவும் நற்பிட்டிமுனை-1 ,எச்.எம்.எம். நிஸ்மி நற்பிட்டிமுனை -2 ,ஜே.எம். சாஜஹான் நற்பிட்டிமுனை -3 ,ஏ.ஜி.எம். அஜித் நற்பிட்டிமுனை -4, எச்.எம் .தானீஸ் மௌலவி நற்பிட்டிமுனை -5, ஏ.எப்.நஸீம் ஆகியோர் நியமனம் பெற்றனர்.

நிகழ்வு

இது தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாரின் அறிமுகமும் உரையும் இடம்பெற்றது.

சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்! | Sri Lanka Muslim Congress Narpittimunai Meeting

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் உட்பட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பொருளாளர் முன்னாள் கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஏறாவூர் நகர சபை தலைவருமான எம். எஸ் .எம் .நளீம் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery