பால் மா பாவனை தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 13, 2023 11:30 PM GMT
Fathima

Fathima

சிங்களப் புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட பாவனைக்கு உதவாத பால் மா களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு, மோதரை பொலிஸ் பிரிவில் பெர்குசன் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றிலேயே, காலாவதியான பால் மா பாவனைக்குத் தகுதியற்றதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பால் மா பாவனை தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Milk Powder Usage

இந்த சோதனையின் போது, ​​விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார் 2,000 கிலோ பால் மா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 80 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான பால் மா பொருட்கள், காலாவதியான இனிப்புப் பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.