ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
Galle
Ranil Wickremesinghe
Election
By Mayuri
தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதற்குரிய கட்டுப்பணம் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் இடம்பெற்று வரும் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் அவரது சகோதரர் சன்ன விக்ரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோர் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |