மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்பு!
Climate Change
Landslide In Sri Lanka
Landslide
By Fathima
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் மினிப்பே - நெலும்கம பகுதியில் சிக்குண்ட 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மினிப்பே - நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில்12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன.
பாரிய மண்சரிவு
இதன்படி, குறித்த 12 வீடுகளில் இருந்தும் 30 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
எனினும், பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.