நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

By Mayuri Sep 13, 2024 03:09 AM GMT

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலதிக பேருந்து சேவைகள்

நேர அட்டவணையின்றி மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை | Special Transport Servise

இதனிடையே இன்றிரவு மற்றும் நாளைய தினங்களில் பதுளையிலிருந்து கொழும்பு வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW