இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Laksi
கொழும்பு (Colombo) நகரில் இன்று (31) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பாதுகாப்பு பணிகளுக்காக 6000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வேலைத்திட்டம்
பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, புலனாய்வு அதிகாரிகளும் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்வதால் அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |