நாட்டில் வரி அடையாள எண் பெற்றவர்களுக்கு விசேட அறிவிப்பு

Ranjith Siyambalapitiya Sri Lanka Sri Lanka Government Value Added Tax​ (VAT)
By Harrish Jul 05, 2024 07:25 AM GMT
Harrish

Harrish

நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

23 இலட்சம் பேர்

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் 23 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை(TIN) பெற்றுள்ளதுடன் ஜூன் மாதத்தில் மாத்திரம் 13 இலட்சம் பேர் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் வரி அடையாள எண் பெற்றவர்களுக்கு விசேட அறிவிப்பு | Special Notification For Tin Number Holders Tax

மேலும், ஜூலை மாத இறுதிக்குள் வரி செலுத்துவோர் அடையாள எண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையை 73 இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW