பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு

Sri Lanka Army Sri Lanka Sports
By Faarika Faizal Nov 01, 2025 09:55 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அபார திறமைகளை வெளிப்படுத்திய ஷஃபியா யாமிக் உள்ளிட்ட அனைத்து இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களுக்கும் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

பதவி உயர்வு

இந்த பாராட்டு நிகழ்வில், விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை இராணுவத் தளபதி தனிப்பட்ட முறையில் பாராட்டினார். எதிர்கால போட்டிகளில் அவர்களின் தொடர்ச்சியான வெற்றியை ஊக்குவிக்கும் வகையில் பண ஊக்கத்தொகைகளையும் அவர் வழங்கினார்.

பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு | South Asian Athletics Player Safiya

அத்துடன் அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரித்து, 18 இராணுவ விளையாட்டு வீரர்களும் அவர்களின் நிலையான பதவிகளுக்கு பதவி உயர்வு பெற்றனர்.

அந்தவகையில் குறித்த போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார்.  

இலங்கையின் தங்க மகள்! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா கூறும் செய்தி

இலங்கையின் தங்க மகள்! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா கூறும் செய்தி

இளம் முஸ்லிம் வீராங்கனை குறித்து வெளியாகும் கருத்துக்கள்: அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதின் விளக்கம்

இளம் முஸ்லிம் வீராங்கனை குறித்து வெளியாகும் கருத்துக்கள்: அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதின் விளக்கம்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW