தாயின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத மகன் மரணம்
Sri Lanka
Heart Attack
By Dhayani
இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தாயின் மரணத்தால் மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருந்த மகன் தனது தாயார் இறந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்துருவ, அகடேகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய மாடில்டா பரணமன்ன என்ற ஏழு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத 47 வயதுடைய அவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மேலும், தாயாரின் மறைவினால் இவர் கடும் துயரமும், அதிர்ச்சியும் அடைந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.