புகையிரத நிலையங்களில் சூரிய மின்கலன்கள்! அமைச்சரவை அனுமதி

Sri Lanka Cabinet
By Mayuri Aug 13, 2024 11:18 AM GMT
Mayuri

Mayuri

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தி

புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 300 இற்கும் அதிகமான புகையிரத நிலையங்கள் காணப்படுவதுடன், அவற்றின் சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

புகையிரத நிலையங்களில் சூரிய மின்கலன்கள்! அமைச்சரவை அனுமதி | Solar Cells At Railway Stations

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW