அனுராரபுரத்தில் மொட்டு கட்சியின் முதலாவது தேர்தல் கூட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தலை இலக்கு வைத்து நடாத்தும் முதலாவது கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதிலும் தொகுதிவாரியாக இந்தக் கூட்டங்கள் நடாத்தப்பட உள்ளன.
அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்க உள்ளார்.
அனுராதபுரம் தலாவ நகரில் 26ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இளைஞர், மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.