ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

Srilanka Muslim Congress Sri Lanka
By Faarika Faizal Oct 08, 2025 08:12 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.10.2025)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம்  வேண்டுகோளுக்கிணங்க இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வமைப்பானது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் 

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில், கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இந்த  இளைஞர் காங்கிரஸ் அமைப்பு  புதிய பரிமாணம் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | Slmc Colombo District Youth Congress Inauguration

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

அமைப்பின் நோக்கம்

கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் மற்றும் இளைஞர்களை ஆபத்தான போதைப் பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு நோக்கமாக கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

தற்காலிகமாக மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

தற்காலிகமாக மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW