சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான சந்திப்பு
கொழும்பு (Colombo) - டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், இன்று இடம்பெறும் கூட்டங்கள் சட்டவிரோதமானதும் ஒழுக்கமற்றதுமான சந்திப்புகள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.