ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிர்வாகத்தெரிவானது நேற்று(26) அந்த கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்பீட பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்புக்கள்
இதன்படி கட்சித் தலைவராக - முஸ்னத் முபாறக், பொதுச்செயலாளராக- இர்பான் முஹிதீன், பொருளாளராக- ஏ. எம். அத்னான், தெரிவாகியுள்ளதுடன் அவைத் தலைவர்- சசிகுமார் ராமசாமி, உப தவிசாளர்- ஏ. ஏ. ஸமாம் , பிரதி தலைவர்களாக - கலாநிதி அப்துல் ஜப்பார்,எம். ஹனான் , உப தலைவர்களாக- சி.எம்.வை. இஸ்ஸதீன் ,ஜெஸ்மின் மௌலவி, உப செயலாளர்- முர்ஷித் முபாறக், உப பொருளாளர் -முஹம்மத் பைசல், தேசிய அமைப்பாளர்- எஸ். எல். ரியாஸ், கொள்கை பரப்பு செயலாளர்- ருஷ்தி நாசிர் ,பெண்கள் விவகார இணைப்பாளர்- ஏ கே பாத்திமா பர்வீன் , பெண்கள் விவகார இணை இணைப்பாளர் - சிவயோகினி, செயற்குழு உறுப்பினர்களாக- எம். ஆர். மரீர் அஹமட், ஏ.ஏ.எம் ஸஹ்ரான், ஏ. எம். ஸக்கீ ,அஸீம் ஆகியொரும் தெரிவாகியுள்ளனர்.
மேலும், இதன்போது புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |