பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!

Sri Lanka Ceylon Teachers Service Union Teachers
By Shalini Balachandran Sep 30, 2025 04:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த பணிபுறக்கணிப்பு இன்று (30) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு 

குறித்த விடயத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்! | Sl Uni Teachers Strike Today Over Education Crisis

இந்தநிலையில், நேற்றைய (29) ஊடக சந்திப்பின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.

கடுமையான நெருக்கடி

ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை அத்துடன், தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்! | Sl Uni Teachers Strike Today Over Education Crisis

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் காணப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.