இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Narendra Modi
India
By Laksi
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு (India) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இருதரப்பு கலந்துரையாடல்
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதிலிருந்து அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் விஜயம் இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |