பாற்சோறு தயாரிப்பதற்கான அரிசிக்கு தட்டுப்பாடு

Sri Lanka Sri Lankan Peoples Festival Rice
By Laksi Dec 31, 2024 03:28 AM GMT
Laksi

Laksi

சந்தையில் நாட்டு அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு கடினமாக இருக்கும் என்று மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்கவை கோடிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பண்டிகைகளின் போது பொதுமக்கள் தயாரிக்கும் பாரம்பரிய உணவான பாற்சோறு தயாரிக்க வெள்ளை பச்சை அரிசி பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

அரிசி இறக்குமதி

முன்னதாக, அரிசி பற்றாக்குறை மற்றும் முன்னணி ஆலை உரிமையாளர்கள் கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாடு அரிசியை நுகர்வோருக்கு கிலோவுக்கு 225 ரூபாய் மொத்த விலையிலும், கிலோவுக்கு 230 ரூபாய் சில்லறை விலையிலும் விற்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாற்சோறு தயாரிப்பதற்கான அரிசிக்கு தட்டுப்பாடு | Shortage Of Kiribath Rice In Sl

அத்துடன், அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளதுடன் இதுவரை 75,000 தொன்களுக்கு மேல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: வெளியான எச்சரிக்கை

பற்றாக்குறை 

இதேவேளை அரிசி மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோருகின்றனர், இந்த வரி இப்போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாயாக அறவிடப்படுகிறது.

பாற்சோறு தயாரிப்பதற்கான அரிசிக்கு தட்டுப்பாடு | Shortage Of Kiribath Rice In Sl

இதற்கிடையில், பச்சை அரிசி மற்றும் நாட்டு அரிசிக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும், மற்ற வகைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW