அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples Rice
By Laksi Dec 27, 2024 06:49 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் (Ruwan Senarath) தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

விரைவில் நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல் | Shortage Of Essential Commodities In Sl

இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன.

இந்தநிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.“ என ருவன் செனரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன மயமாக்க வேண்டும்: இம்ரான் எம்.பி

தென்கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன மயமாக்க வேண்டும்: இம்ரான் எம்.பி

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW