அநுரவின் அமைச்சரவைக்கு புதிய குழு: அதிரடி மாற்றங்கள்!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lanka Cabinet
Sri Lankan Peoples
Parliament Election 2024
By Rakshana MA
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த குழுவில் 10 பேர் காணப்படுவர் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனைத்து திட்டங்கள் மற்றும் விலைமனுக் கோரல்கள் தொடர்பில் இந்த குழு கண்காணிப்பு நடத்த உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
புதிய குழுவின் நோக்கங்கள்
ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசேட குழு அமைச்சரவையின் அனைத்து நடவடடிக்கைகளையும் கண்காணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |