இன்று விசாரணைக்கு வர முடியாது ஷிராந்தி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச, இன்றைய தினம் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சட்டத்தரணி மூலம் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு உடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாக தமக்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் செயல்பட்ட ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளைக்குச் சொந்தமான வங்கி கணக்கில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவ ருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக, இன்று பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவு எதிரில் முன்னிலையாகுமாறு ஷிராந்தி ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஷிராந்தி ராஜபக்ச இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாக மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.