1,350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்

Sri Lanka Upcountry People Senthil Thondaman Money
By Shalini Balachandran Jul 17, 2024 08:00 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

தோட்டத்தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக நிறுவனங்கள் உறுதியளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,  1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் நேற்று எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டங்கள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,700 ரூபா சம்பள உயர்வு

இதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதும், முதலாளிமார் சம்மேளனம் அதனை மறுத்து வருகின்றது.

1,350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான் | Senthil Thondaman Rejected Salary Proposal 1350 Rs

மேலும், 1,200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் 150 ரூபா கொடுப்பனவுடன் 1,350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் எனவும் நிறுவனங்கள் கூறுகின்றன.

நிறுவனங்களின் இந்தப் போக்கை இ.தொ.கா வன்மையாக கண்டிக்கிறது எனவும், கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

முதலாளிமார் சம்மேளனம்

மேலும் இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும். சம்பள உயர்வு தாமதமானால் தோட்டங்களில் அமைதியின்மை ஏற்படும். இதனால் முகாமையாளர்களும் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

1,350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான் | Senthil Thondaman Rejected Salary Proposal 1350 Rs 

நாங்கள் கோரும் 1,700 ரூபா கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொழிலாளர்களின் போராட்டம் வலுப்பெறும் எனவும், 1,700 ரூபாவுக்கும் குறைவான நிறுவனங்களின் எந்தவொரு முன்மொழிவையும் இ.தொ.கா ஏற்றுக்கொள்ளாது.” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW