குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

Ampara Sri Lankan Peoples Eastern Province
By Laksi Jan 08, 2025 10:31 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara) - மருதமுனையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் (2025- 2027) தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (8) மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த கருத்தரங்கு தொடர்பிலான சிறப்புரை ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கருத்தரங்கு

தொடர்ந்து குறித்த கருத்தரங்கில் வளவாளராக சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராக எம்.எம்.நௌசாத் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு மேற்கொள்ளப்படுவதுடன் மக்களின் வறுமையை ஒழிக்க சகல உத்தியோகத்தர்களும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு | Seminar For Low Income Families In Maruthamunai

மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.ரஞ்சன் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் சமூர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சனூபா சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். பாத்திமா சிப்றா சமூர்த்தி வங்கியாளர்கள் உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக 52 வகையான உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி

உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery