குருநாகலில் பாதுகாப்பற்ற பயணத்தால் பாடசாலை மாணவர் பலி
குருநாகல்(Kurunegala) - கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் புனரமைக்கப்பட்ட புகையிரத பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலகடவலயிலிருந்து கல்கமுவ நகரை நோக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரதப் பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பலுகடவல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சாமோத் வசல என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இந்நிலையில், காயமடைந்த ஏனைய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பத்தின்போது விபத்துக்கு உள்ளான ஒருவர் அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று உதவி கோரியுள்ளார்.
இதன்படி ஓடையில் விழுந்தவர்களை 1919 அவசர சேவைக்கு அறிவித்து மூவரையும் கல்கமுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், காயமடைந்த இரு மாணவர்களும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு மாணவர் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.