மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

By Fathima Apr 20, 2024 10:00 AM GMT
Fathima

Fathima

ரம்பே - மெல்சிறிபுர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து ரம்பே - பன்சியகம பிரதேசத்தில் நேற்று (19.) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலடன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக சிகிச்சை

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு | School Student Died In Motorcycle Accident

இந்த விபத்தில் ஓட்டுனரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஓட்டுனரான மாணவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.