மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Puttalam Risad Badhiutheen Sri Lankan Schools
By Laksi Dec 30, 2024 10:10 AM GMT
Laksi

Laksi

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (Rishad Bathiudeen) முயற்சியில் புத்தளம்- நாகவில்லு பிரதேசத்தின், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம் (29) மேற்கொண்டுள்ளார்.

இந்த பாடசாலையின் 3 மாடிக்கட்டிடமானது சுமார் 07 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

தேவையான ஆலோசனை

மேற்படி விஜயத்தின் போது, வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய அவர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், பாடசாலைக்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம் | School Building Will Be Constructed At Rishad

இந்நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.ரீ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ரிஜாஜ் மற்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் நாசர், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் நாகாவில்லு கிளை முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery