இலங்கையில் சவூதி நூர் திட்டம் நிறைவு
சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்படையாகக் கொண்ட 'சவூதி நூர்' தன்னார்வத் திட்டத்தை இலங்கையில் நிறைவு செய்துள்ளது.
இத்திட்டமானது, சம்மாந்துறை மற்றும் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 25 திட்டங்கள்
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளதுடன் அவர்களிடத்தில் மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தி, பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும், அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், சமூக செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



