தூதரகங்களை மீண்டும் திறக்க சவூதி - ஈரான் சம்மதம்: சீன முயற்சி வெற்றி!

China Saudi Arabia Iran
By Fathima Apr 07, 2023 11:17 AM GMT
Fathima

Fathima

ஈரானிலும் சவூதி அரேபியாவிலும் பரஸ்பரம் தூதரகங்களை திறக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

வளைகுடா நாடான சவூதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டன.

இது பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா முஸ்லிம் பிரிவினரை கோபமடையச் செய்துள்ளது.

தூதரகங்களை மீண்டும் திறக்க சவூதி - ஈரான் சம்மதம்: சீன முயற்சி வெற்றி! | Saudi Arabia Iran Agree To Reopen Embassies

சீனா முயற்சி

குறிப்பாக ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளின் உறவில் விரிசலையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டடுள்ளது. இது தொடர்பாக நடந்த முயற்சியில் இரு நாடுகளும் சமாதானம் அடைந்துள்ளன.

தூதரகங்களை மீண்டும் திறக்க சவூதி - ஈரான் சம்மதம்: சீன முயற்சி வெற்றி! | Saudi Arabia Iran Agree To Reopen Embassies

இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம்

இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், சவூதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோர், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்றைய தினம் (06.04.2023) சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, மோதல் காரணமாக இரு நாடுகளிலும் மூடப்பட்ட தூதரகங்களை திறக்க இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.