சஜித்திடம் இருந்து விலகியதுக்கு இதுவே காரணம்! போட்டுடைத்தார் சரத் பொன்சேகா
நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சஜித்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தப்பிச்சென்ற போது நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் குறித்த பொறுப்பில் இருந்து விலகிச் சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் எந்தவொரு கட்சிசார்பாகவும் செயற்படவில்லை எனவும், அதனாலேயே தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |