சரத் பொன்சேகாவின் பதவி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்
ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் எந்தப் பதவியையும் கோரவில்லை என அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
அதன்போது, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரு பதவியை வழங்குவதற்கான எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், சரத் பொன்சேகவும் அரசாங்கத்திடம் எந்தப் பதவியையும் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அண்மைய காலங்களாக சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில் அமைச்சரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |