சவுதி அரேபிய தூதுவரை சந்தித்த சனத் ஜயசூரிய

Sanath Jayasuriya Sri Lanka Tourism Tourism Saudi Arabia
By Sheron Apr 07, 2023 12:29 AM GMT

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய இலங்கையின் சுற்றுலாத்துறை தூதுவருமான சனத் ஜயசூரிய கொழும்பில் உள்ள சவுதி தூதுவரான H.E காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி, உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவிற்கிடையிலான சுற்றுலாத்துறையையும் விளையாட்டுத்துறையையும் மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

 

இந்த கலந்துரையாடலானது செயலாற்றல்மிக்கதாகவும் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றது என சனத் ஜயசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

இருவரினதும் இந்த சந்திப்பானது இரு நாட்டிற்கிடையிலான நட்புறவை வழு சேர்க்கும் விதமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.