ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்..! சாணக்கியன் கூறியுள்ள விடயம்

Batticaloa Shanakiyan Rasamanickam
By Mayuri Aug 18, 2024 10:27 AM GMT

தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அபிவிருத்தித் திட்டங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தித் திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்..! சாணக்கியன் கூறியுள்ள விடயம் | Sanakkiyan Statement About President

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் ஜனாதிபதியாக வர வேண்டும்.

அவ்வாறான சூழல் வருகின்றபோது தான் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW