தமிழர் தலைநகருக்கு கொண்டு செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) மூத்த தலைவர் மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனது (R. Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு (Trincomalee) எடுத்துச் செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று (04) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி
இதனை தொடர்ந்து, தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று (05) காலை கார் மூலம் பலாலி (Palali) விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாளை மறுநாள் (07) இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |