வேதன அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ள விடயம்

Government Employee Money
By Mayuri Jul 13, 2024 04:08 AM GMT
Mayuri

Mayuri

ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமூகளித்த அரச ஊழியர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை 

முழு அரச சேவையினரின் வேதன கோரிக்கையை ஏற்காமல், பணிக்குச் சமூகமளித்த ஒரு சிலருக்கு மட்டுமே வேதன உயர்வை வழங்குவதற்கான தீர்மானத்தைத் தடுக்க சட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேதன அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ள விடயம் | Salary Increment In Sri Lanka

குறிப்பிட்ட சிலருக்கே வேதன உயர்வை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராகத் தமது தொழிற்சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW