தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு ரூ. 10,000 - அஸ்வெசும பயனாளிகளுக்கு 20 கி.கி. அரிசி
By Mayuri
இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும்.
மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.