அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Government Employee Government Of Sri Lanka Salary
By Faarika Faizal Oct 07, 2025 02:11 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

அரசாங்க ஊழியர்களின் நிர்ணயிக்கப்பட்ட அடுத்தக்கட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சம்பளத்தின் முதற்கட்டம் இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

தற்காலிகமாக மூடப்படவுள்ள பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர் சம்பளத்தை 60-80 சதவீதம் அதிகரித்து மூன்று கட்டங்களாக வழங்கும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Salary Increment About Government Staffs

இந்தாண்டு 30 சதவீத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில் 30 - 35 சதவீதம் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்குகிறது. இந்த சம்பள உயர்வு அரச, கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரசு செலவினங்களில் மிகப்பெரிய தொகை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உட்பட தொடர்ச்சியான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

ட்ரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வெளியான தகவல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW