மியன்மார் அகதிகள் விவகாரம்: அரசிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை

Sajith Premadasa Government Of Sri Lanka Myanmar
By Laksi Jan 08, 2025 01:03 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு அனுப்ப வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (8)உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஒன்றரை மாதத்தில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெறும்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஒன்றரை மாதத்தில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெறும்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரசிடம் கோரிக்கை

 இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், "அண்மையில் மியன்மார் நாட்டு ரோஹிங்கிய அகதிகள் குழுவொன்று முல்லைத்தீவை வந்தடைந்தனர். இவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு தயாராகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மார் அகதிகள் விவகாரம்: அரசிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை | Sajith Request To Govt Regarding Myanmar Refugees

இந்த மக்களைத் திருப்பி அனுப்புவது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலாகும்.

குறித்த மக்களுக்கு மியன்மார் நாட்டில் பாராபட்சக் கவனிப்புக் காட்டப்படுகின்றது,சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர் என உலமகே ஏற்றுக்கொண்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சியை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றார். 

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW