தென் மாகாண பல்கலைக்கழக பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை பெற்ற மாணவன்
அண்மையில் Sri Lanka Association for Software and Services Companies ( SLASSCOM Sri Lanka ) கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் விருது வழங்கல் நிகழ்வொன்றை நடத்தியது.
இதன்போது பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த கண்டுபிடிப்பு
அந்த வகையில் சாய்ந்தமருது சேர்ந்த சவ்பாத் மஜீட் என்ற மாணவன் அவர் உருவாக்கிய விவசாயம் மற்றும் சக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு தென் மாகாண பல்கலைக்கழக பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பு என்ற விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாணவன் பாடசாலை காலத்தில் இருந்து பல்வேறு வகையான கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி சர்வதேச ரீதியாகவும் வெற்றியீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரியில் Food Technology பிரிவில் கல்வி பயில்வதுடன் Fonterra Brand Srilanka Company இன் Inter ஆக Research and New Product Department இல் பணியாற்றுகிறார்.