பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

Sri Lanka Politician Saidulla Marikkar National People's Power - NPP
By Faarika Faizal Oct 27, 2025 11:20 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை நாட வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்விடயத்தை தெரிவிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு எதிரான அரசின் நிலைப்பாடு: பிரதமர் கூறிய காரணம்

சர்வதேச விசாரணைக்கு எதிரான அரசின் நிலைப்பாடு: பிரதமர் கூறிய காரணம்

நூற்றுக்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே நூற்றுக்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் | S M Marikkar

அத்துடன், மக்கள் பிரதிநிதிகள், தனது கடமையை செய்யும் நேரத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் போது, நாட்டில் பொது மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நாம் ஆதரவு 

மேலும், வெலிகம தவிசாளர் கொலை செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருந்ததாக அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறான காரணங்களை காட்டி, அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளுக்காக பாதுகாப்பை மறுத்து வருகிறது.

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் | S M Marikkar

இந்நிலையில், ஒரு கட்சியாக போதை ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்தாலும் கூட இவ்வாறாக பொறுப்பற்ற விடயங்களையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆகவே, மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிடின், இது தொடர்பில் சர்வதேசத்துக்கு அறிவிக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார். 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்

தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி: அரசாங்கத்தின் விளக்கம்

தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி: அரசாங்கத்தின் விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW